ட்ரெண்டிங்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு! 

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் 02- ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.05 லட்சம் அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1- ஆம் தேதி அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் வரும் ஏப்ரல் 02- ஆம் தேதி வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.