ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை - பயண அட்டவணையை வ

சேலத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், அதற்கான பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்துக்கும் தினசரி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ், வரும் அக்டோபர் 29- ஆம் தேதி முதல் வழங்கவுள்ளது. நாள்தோறும் காலை 11.20 மணிக்கு புறப்படும் விமானம், நண்பகல் 12.30 மணிக்கு சேலத்தை வந்தடையும். அதேபோல், மறுமார்க்கத்தில், நண்பகல் 12.50 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 01.45 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.

அதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 30- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்து சேலத்துக்கும், சேலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கும், ஹைதராபாத்தில் இருந்து சேலத்துக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையை வழங்கவுள்ளது. வாரத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நான்கு நாட்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் விமான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.goindigo.in என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.