சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சேலம்-பெங்களூரு, பெங்களூரு- சேலம், சேலம்- ஹைதராபாத், ஹைதராபாத்- சேலம் ஆகிய வழித்தடங்களுக்கு வரும் அக்டோபர் 29- ஆம் தேதி முதல் விமான சேவை வழங்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவுத் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இது தொடர்பான விமான பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு www.goindiago.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


