ட்ரெண்டிங்

சேலத்தில்,பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் பேச்சுப் போட்டி !!!

 

சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கவிதை,கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும்,படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை,கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களிடையே தமிழில் கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டிகள் 14.10.2025 அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடத்திடவும்.கல்லூரி மாணவர்களிடையே கவிதை கட்டுரை.பேச்சுப்போட்டிகள் 15.10.2025 அன்று முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கும் எனவும் இந்த போட்டியை,சேலம்-7 அரசு கலைக்கல்லூரியில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுக்குத்,தேர்தெடுக்கப்படும்,மாணவ,மாணவிகளுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்,எனவும் ஒவ்வொரு பள்ளி,கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒரு போட்டிக்கு ஒருவர் என்ற வகையில் பங்கேற்க வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது, போட்டியில் வெற்றிபெறும் பள்ளி.கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000-மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000 மும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர்,கல்லூரி முதல்வரின் பரிந்துரைக்கடிதத்துடன் முறையாக போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.மேலும்,விவரங்களுக்கு 0427-2417741 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்,தெரிவித்துள்ளார்.