ட்ரெண்டிங்

2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கும் கீழ் குறைந்தது! 

2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கும் கீழ் குறைந்தது! 

மேட்டூர் அணையின் நீர்மட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 70 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறைவான அளவிலே மழை பெய்வதாலும், தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய தண்ணீரை இதுவரை தராததாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. 

இன்று காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 154 கனஅடியில் இருந்து 107 கனஅடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 69.96 அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 32.66 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவது டெல்டா மாவட்ட விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. 

இதனிடையே, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 2 அல்லது 3 நாட்களில் தண்ணீரை வழங்க கர்நாடகா அரசு உத்தரவிடுவதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.