ட்ரெண்டிங்

மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலானது!

 

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார். 

 

திருக்குறள், கவிதை, ஆங்கிலம் மேற்கோள்களுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். பிரமிள் எழுதிய கவிதை, அமர்த்தியா சென் மேற்கோள் என பட்ஜெட் தாக்கலின் போது உரையாற்றினார். காலை 10.00 மணி முதல் 2 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையாற்றினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

 

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துப் பெற்றார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதேபோல், சிப்காட், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.