ட்ரெண்டிங்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது!

சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ. அமலுக்கு வந்தது தொடர்பான விதிகளுடன் கூடிய அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியது. அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் குடியேற வழிவகைச் செய்துள்ளது சி.ஏ.ஏ.

2014- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த சமணர்கள், பௌத்தவர்களுக்கும் சி.ஏ.ஏ. பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் இந்திய குடியுரிமைக் கோரி விண்ணப்பித்துப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சி.ஏ.ஏ. கொண்டு வர கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.