ட்ரெண்டிங்

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்!

எடப்பாடி அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ய முயற்சி செய்த போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கோலப்பைப் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றி நெசவாளர் காலனியில் மதுபானக் கடைத் திறக்கப்படவிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுக்கடைக்கு காவல்துறையினரே பாதுகாப்பு அளிப்பதாக கைதான பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.