ட்ரெண்டிங்

அக்.8, 9 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வரும் அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.06) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.