ட்ரெண்டிங்

கஸ்தூரிபாய் காந்தி பாலத்துக்கு நூற்றாண்டு விழா எடுத்த மக்கள்!

நூற்றாண்டைக் கடந்த அன்னை கஸ்தூரிபாய் காந்தி பாலத்துக்கு சேலம் மாநகர மக்கள் விழா எடுத்துக் கொண்டாடினர். 

சேலம் மாநகரில் உள்ள திருமணிமுத்தாற்றின் மீது கட்டப்பட்ட பாலம், கடந்த 1923- ஆம் ஆண்டு செப்டம்பர் 02- ஆம் தேதி அன்று கஸ்தூரிபாய் காந்தி கரங்களால் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

இந்த பாலம் 1000 ஆண்டுகளை நிறைவுச் செய்தததை அடுத்து, சேலம் மாநகர பொதுமக்களும், வரலாற்று ஆர்வலர்களும் விழா எடுத்துக் கொண்டாடியதுடன், அன்னதானமும் வழங்கினர். 

சுகவனேஸ்வர் கோயிலில் இருந்து இரண்டாவது அக்ரஹாரப் பகுதிகளை இணைக்கும் பாலத்தை மக்கள் மக்கள் பயன்பாட்டிற்காக, கிருஷ்ணதாஸ் தேவ்சந்த் என்பவர் தனது சொந்த செலவில் கட்டினார். 

இந்த விழாவில், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், வரலாற்று ஆர்வலர்கள் என 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.