ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் சேவை குறித்த அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜோலார்பேட்டை ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (ரயில் எண் 56108) இன்று (ஜன.21), ஜன.28 ஆகிய தேதிகளில் ஈரோடு முதல் திருப்பத்தூர் வரை மட்டுமே செல்லும்; திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை செல்லாது.
மறுமார்க்கத்தில், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (ரயில் எண் 56107) திருப்பத்தூரில் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படும்; ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு இயக்கப்படாது. எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை இதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



-SXgDfGgJfO.jpg)