ட்ரெண்டிங்

சொரனூர்- கோவை ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் என அறிவிப்பு!

சொரனூர் - கோவை ரயில் (Shoranur Jn- Coimbatore Jn Daily Train) ஒரு மணி நேரம் தாமதமாக கோவை ரயில் நிலையத்திற்கு வந்தடையும் எனத் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சொரனூர்- கோவை தினசரி ரயில், நாள்தோறும் காலை 08.20 மணிக்கு சொரனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11.10 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த நிலையில், மண்ணனூர்- ஓட்டப்பாலம் ரயில் நிலையங்களில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், அக்டோபர் மாதம் 06, 09, 11, 13, 16, 18, 20, 25, 27, 29, 31 மற்றும் நவம்பர் மாதம் 02, 04, 06, 08, 10, 14, 16, 18, 20, 22, 24, 27, 29 ஆகிய 24 நாட்கள் மட்டும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கோவை ரயில் நிலையத்தை சொரனூர்- கோவை ரயில் வந்தடையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.