ட்ரெண்டிங்

சேலம் வழியாக செல்லும் நான்கு ரயில்கள் ரத்து- சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

சேலம் வழியாக செல்லும் நான்கு ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜோலார்பேட்டை- சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. எனவே, சேலம் வழியாக செல்லும் கொச்சுவேலி- பெங்களூரு ஹிம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 16319) வரும் செப்டம்பர் 23- ஆம் தேதியும், பெங்களூரு- கொச்சுவேலி ஹிம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 16320) வரும் செப்டம்பர் 24- ஆம் தேதியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

அதேபோல், கோவை போத்தனூர், சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12683) செப்டம்பர் 24- ஆம் தேதியும், மறுமார்க்கத்தில் பெங்களூரு- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12684) வரும் செப்டம்பர் 25- ஆம் தேதியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.