சேலம் வழியாக தாம்பரம்- மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தாம்பரம்- மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. தாம்பரம்- மங்களூரு சிறப்பு ரயில் (ரயில் எண் 06049) வரும் அக்டோபர் 06, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், மங்களூரு- தாம்பரம் சிறப்பு ரயில் (ரயில் எண் 06050) வரும் அக்டோபர் 07, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-SXgDfGgJfO.jpg)