ட்ரெண்டிங்

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன கொப்பரைத் தேங்காய் மூட்

சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயில் ஊராட்சி மேச்சேரி பிரிவு சாலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய்க்கான ஏலம் நேற்று (செப்.30) நடைபெற்றது.

 

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, தாரமங்கலம், மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 229 கொப்பரை தேங்காய் மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தனர்.

 

நாள் முழுவதும் மின்னணு முறையில் நடைபெற்ற ஏலத்தில் ரூபாய் 8 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் மூட்டைகள் ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு கிலோ கொப்பரைத் தேங்காய் 78.89 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 56.75 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த தகவலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.