ட்ரெண்டிங்

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்! 

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற ஏப்ரல் 15- ஆம் தேதி அன்று தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு வருகின்ற ஏப்ரல் 15- ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. 

இம்முகாமில் ஐ.டி.ஐ முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களைத் தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) மத்திய அரசால் வழங்கப்படுகின்றது. 

எனவே ஐ.டி.ஐ பயிற்சி முடித்து, தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காதவர்கள் அனைவரும் அனைத்து உண்மைச் சான்றிதழ்கள் மற்றும் நகல் சுய தங்களது விவரத்துடன் (பயோடேட்டாவுடன்) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.