ட்ரெண்டிங்

பொங்கல் பண்டிகையையொட்டி, களைகட்டிய ஆட்டுச்சந்தை!

 

பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் கொங்கணாபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் விற்பனை களைகட்டியது.

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் வாரச்சந்தையானது சனிக்கிழமை நாட்களில் நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்கவும், வாங்கவும் அதிக அளவில் வருவது வழக்கம்.

 

அதன் தொடர்ச்சியாக, கொங்கணாபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை இன்று (ஜன.13) கூடியது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஆடுகளின் வரத்து வழக்கத்தை விட அதிகரித்திருந்தது. அதேபோல், ஆடுகளின் விற்பனையும் களைகட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் ரூபாய் 5,000 முதல் 25,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது. வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

 

இன்று கூடிய ஆட்டுச்சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்