ட்ரெண்டிங்

சேலம் ஆவினில் தீபாவளி இனிப்பு தயாரிப்பு தீவிரம்!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஆவின் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் இனிப்புகள் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சிறப்பாக ஆவின் சார்பில் தயாரிக்கப்படும் இனிப்புகளுக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உண்டு. 

 

அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 40 டன் இனிப்பு தயாரிக்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

தீபாவளியை முன்னிட்டு சேலம் ஆவின் இனிப்பு உற்பத்தி மையத்தில் தற்போது மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக,மைசூர் பாகு,ஸ்பெஷல் மைசூர் பாகு,கேரட் மைசூர் பாகு,

முந்திரி கேக்,மிக்சர் உள்ளிட்ட பல்வேறு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

 

இந்த இனிப்புகள் அனைத்தும் அதிநவீன சுத்திகரிப்பு மற்றும் தரநிலை கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கப்படுவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தீபாவளி பண்டிகை காலங்களில் சந்தையில் இனிப்பு தேவைகள் அதிகரிக்கும் சூழ்நிலையில்,மக்கள் சுகாதாரத்துக்கு ஏற்ற தரமான இனிப்புகளை வழங்குவது தான் ஆவின் நோக்கம் எனவும், கடந்த ஆண்டை விட இந்த முறை அதிக அளவு இனிப்பு தயாரிப்பு நடைபெறவுள்ளதாகவும் ஆவின்,நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

சேலம் மட்டுமல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும் இந்த இனிப்புகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தீபாவளி பண்டிகையில் சுத்தமான, சுவையான இனிப்புகளை வழங்கும் நோக்கத்தோடு தயாரிப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.