சேலம் ரயில்வே கோட்டம் வந்தும் பயனில்லை என்று பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாங்கனி நகரமாகவும், வணிக நகரமாகவும் உள்ள சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 60 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு கடந்த 2007- ஆம் ஆண்டு சேலம் ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டது. சேலம் கோட்டம் அமைக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியும் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் இருந்தாலும், இங்கிருந்து சென்னைக்கு புறப்படும் ரயில்கள் ஒன்று கூட இல்லை என்று வேதனையுடன் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
வருவாய் அதிகம் இருந்தும் சேலம் ரயில்வே கோட்டம் புறக்கணிக்கப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர். சேலம் ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டு, 17- ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் கோட்டம் வந்தாலும் மாற்றம் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கிடப்பில் உள்ள திட்டங்களையும், ரயில்களின் சேவைகளையும் நீட்டிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


-SXgDfGgJfO.jpg)