ட்ரெண்டிங்

 முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! 

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், படகு பயணம் மேற்கொள்ளவும் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆத்தூர் கோட்ட வன அலுவலர் சேவியர் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக கடந்த மே 18- ஆம் தேதி ஆத்தூர் ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் அதிகளவிலான நீர்வரத்து காரணமாக பாதுகாப்பு நலன் கருதி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்திடவும், படகு பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், படகு பயணம் மேற்கொள்ளவும் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆத்தூர் கோட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.