ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து கொச்சின், பெங்களூருவுக்கு விமான சேவை- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டத

சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் கொச்சின், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை அலையன்ஸ் ஏர் நிறுவனம் (Alliance Air) தொடங்கவுள்ளது. இந்த நிலையில், கொச்சின்- சேலம்- கொச்சின், பெங்களூரு- சேலம்- பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் தொடங்கவுள்ள விமான சேவைக் குறித்தும், விமான பயண அட்டவணை குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, மேலே குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில் வாரத்தில் வியாழன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவையை வழங்கவுள்ளதாக அலையன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஆரம்பக் கட்டணமாக ரூபாய் 1,999-ஐ விமான நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

 

இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவிற்கு https://www.allianceair.in/book என்ற இணையதளப் பக்கத்தையோ (அல்லது) +91-4442554255, +91-4435113511 ஆகிய தொலைபேசி எண்களையோ தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.