ட்ரெண்டிங்

ரூபாய் 5 லட்சத்திற்கு விற்பனையான கொப்பரை தேங்காய்- விவசாயிகள் மகிழ்ச்சி!

சேலம் மாவட்டம், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.

 

தேசிய அளவிலான மின்னணு ஏலத்திற்காக, 50 வகையான எண்ணெய் பிழித்திறன் கொண்ட 1,931 கிலோ கொப்பரைத் தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இவைகள் அதிகளவாக ஒரு கிலோ 75.65 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 58.75 ரூபாய்க்கும் விற்பனையானது.

 

இந்த விற்பனைக் கூடத்தில் தேக்கி வைக்கும் வசதி இருப்பதால், விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.