ட்ரெண்டிங்

நகராட்சித் தலைவரைக் கண்டித்து கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி!

மேட்டூர் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி, தி.மு.க. கவுன்சிலர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் இளங்கோ தனது வார்டில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியதுடன், நகராட்சித் தலைவரைக் கண்டித்துத் தீக்குளிக்கவும் முயன்றார்.

அப்போது, அருகில் இருந்த சக உறுப்பினர்கள் அவரை தடுத்து நிறுத்தி, அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். இளங்கோவின் கண்களில் பெட்ரோல் இறங்கியதால் எரிச்சல் தாங்காமல் துடித்துடித்துள்ளார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.