ட்ரெண்டிங்

சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள்!

 

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியை தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று (செப்.06) மாலை 05.00 மணியளவில் தொடங்கி வைத்தனர். 

பின்னர், அரசுப் பொருட்காட்சியில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர். சுமார் 45 நாட்கள் வரை நடைபெறும் இந்த அரசுப் பொருட்காட்சியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விழாவில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., சேலம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.