சேலத்தில் தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட மக்கள்...
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலு(51). இவர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
பாலு என்பவர் அப்பகுதியில் டீ விற்கும் தொழில் செய்து வருவதாகவும்.எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் 60க்கும் எதற்காக ஏற்பட்ட பொதுமக்கள் எங்கள் பகுதியில் ஸ்ரீ சபரி வாசன் தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு நடத்திவரும் ரேகா மற்றும் வைஷ்ணவி யிடம் தீபாவளி சீட்டு சேர்ந்தோம்.ஒவ்வொரு நபர்களிடம் இருந்தும் வாரம் தலா 1200,200,100 என்ற முறையில் வசூல் செய்தனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேமிப்பு பணத்தை வழங்குமாறு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அவர்களிடம் கேட்டோம். அப்போது மூன்று நாட்களில் பணத்தை தருவதாக கூறினர்.பணம் தராமல் காலம் தாழ்த்தியதால் தொடர்ந்து அவர்களிடம் பணத்தை வழங்குமாறு கேட்ட பொழுது பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். புகாரின் பேரில் காவல் நிலையத்தில் ஆஜரான ரமேஷ் மற்றும் ரேணுகா பணத்தை திருப்பி ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் தங்கள் சேமிப்பு பணத்தை திருப்பி தருமாறு பலமுறை கேட்கும் பணத்தை ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு.சேமிப்பு பணத்தை மீட்டு தரும்படியும்,கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது ஊழிய நடவடிக்கை எடுக்கும் படியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 20 ற்கும் மேற்பட்டோர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



-hcTFAGMRGb.jpg)