ட்ரெண்டிங்

ரவுடி வெட்டி படுகொலை...சேலத்தில் பரபரப்பு! 

சேலம் மாவட்டம், வலசையூர் அருகே வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவுடி பீரோ பட்டறை சரவணன் (வயது 45) என்பவர் காரில் வெளியே செல்லும்போது பனங்காடு அருகே வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தப்படி சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து விரைந்துச் சென்ற காரிப்பட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா? இல்லை முன்விரதம் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட சரவணன் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தது.