ட்ரெண்டிங்

பெங்களூரு- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கேஎஸ்ஆர் பெங்களூரு- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 06547) சேவையும், வேளாங்கண்ணி- கேஎஸ்ஆர் பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 06548) சேவையும் வரும் அக்டோபர் மாதம் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்த ரயில் சேவைக்கான அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வாராந்திர சிறப்பு ரயில், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு சேலம் ரயில்வே கோட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களையோ (அல்லது) தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.