ட்ரெண்டிங்

சேலம் வழியாகச் செல்லும் 12 ரயில் சேவைகள் ரத்து!

சேலம் வழியாகச் செல்லும் 12 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்துச் செய்துள்ளதாக சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெலுங்கானா மாநிலத்தின் ஹஸன்பார்த்தி (Hasanparthi)- உப்பல் (Uppal) ரயில் நிலையங்களின் மூன்றாவது லைனில் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், சேலம் வழியாகச் செல்லும் கீழ்க்கண்ட 12 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 30, ஜனவரி 06 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம்- ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில், ஜனவரி 02, ஜனவரி 09 ஆகிய தேதிகளில் ஹஸ்ரத் நிஜாமுதீன்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டிசம்பர் 31, ஜனவரி 07 ஆகிய தேதிகளில் கோவை- ஹஸ்ரத் நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், ஜனவரி 03, ஜனவரி 10 ஆகிய தேதிகளில் ஹஸ்ரத் நிஜாமுதீன்- கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், ஜனவரி 01, 08 ஆகிய தேதிகளில் ப்ரௌனி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், ஜனவரி 05, 12 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம்- ப்ரௌனி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 02, 09 ஆகிய தேதிகளில் பிளாஸ்ப்பூர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், டிசம்பர் 31, ஜனவரி 07 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி- பிளாஸ்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், ஜனவரி 03- ஆம் தேதி கோர்பா- கொச்சுவேலி ரயில் சேவையும், ஜனவரி 01- ஆம் தேதி கொச்சுவேலி- கோர்பா ரயில் சேவையும், ஜனவரி 04, 05. 07, 11, 12 ஆகிய தேதிகளில் கோரக்பூர்- கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், ஜனவரி 02, 03, 07, 09, 10 ஆகிய தேதிகளில் கொச்சுவேலி- கோரக்பூர் ரயில் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில்களில் பயணிக்க முன்பதிவுச் செய்த பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.