பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக டெல்லி புறப்பட்டு சென்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (செப்.27) காலை 11.00 மணிக்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். சந்திப்பின் போது, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி, புதிய கல்வி கொள்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு தற்போது புறப்பட்டுள்ளார்.


-SXgDfGgJfO.jpg)