ட்ரெண்டிங்

வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர்....துரிதமாகச் செயல்பட்டு பணத்தை மீட்

சேலம் மாவட்டம், மேச்சேரி, அண்ணாநகரைச் சேர்ந்த சுப்ரமணி (வயது 48) என்பவருக்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட நபர் தன்னை ஐசிஐசிஐ வங்கி ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் 5 லட்சம் கடன் தருவதாகக் கூறியதை நம்பி மனுதாரரிடம் Document fee, Processing Fees, Insurance என பல தவணைகளில் ரூபாய் 39,999 பெற்றுக் கொண்டு கடன் தராமல் ஏமாற்றி பணம் பறித்த நபரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டி காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தார்.

 

மேற்படி மனு தொடர்பாக, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலனின் அறிவுரைபடி, சைபர் க்ரைம் பொறுப்பு அதிகாரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) கண்ணனின் மேற்பார்வையில் CSR-803/2023 பதிவு செய்து சேலம் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் உள்ள குழு துரித நடவடிக்கை எடுத்ததின் பேரில் மனுதாரர் இழந்த பணம் ரூபாய் 39,999- ஐ மீட்கப்பட்டு மனுதாரரின் வங்கி கணக்கில் திரும்பச் சேர்க்கப்பட்டது.

 

மேலும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் வங்கியிலிருந்து பேசுவதாக கூறுவதையோ, செல்போனுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளையோ நம்பி தங்களின் வங்கி விபரம் மற்றும் ஓடிபி- களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும், தேவையற்ற லிங்க் மற்றும் ஆப்-களில் விபரங்களை பதிவீடு செய்ய வேண்டாம் எனவும், யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால், உடனடியாக சைபர் க்ரைம் அவசர உதவி எண் 1930- ஐ தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனே புகாரை பதிவு செய்யும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுத் தர இயலும் எனவும், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் இ.கா.ப. தெரிவித்துள்ளார்.