ட்ரெண்டிங்

நங்கவள்ளி வாரச்சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்!

நங்கவள்ளி வாராந்திர கால்நடைச் சந்தையில் கால்நடை விற்பனைக் குறைந்ததால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி பகுதிகளில் இருந்து ஆடு, மாடு உள்ளிட்டவற்றை நங்கவள்ளி வாராந்திர கால்நடைச் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் கால்நடைகளின் விற்பனை மந்தமாகவே இருந்தது.

 

கடந்த வாரம் 20,000 ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள், தற்போது 10,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய அளவில் கால்நடைகளை வாங்க யாரும் வராததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

இந்த மாதம் நுகர்வுக் குறையும் என்பதால், அடுத்த சில வாரங்களில் இதே நிலை தான் நீடிக்கும் என்கிறார்கள் வியாபாரிகள்.

 

அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழி, மீன் இறைச்சிகளின் விற்பனை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். மேலும், இறைச்சிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.