ட்ரெண்டிங்

கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறி

கோயம்புத்தூரில் இருந்து மங்களூர் சென்ட்ரல் வரை செல்லும் கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் (ரயில் எண் 22610), மறுமார்க்கத்தில் மங்களூருவில் சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் மங்களூரு சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் (ரயில் எண் 22609) வரும் அக்டோபர் 01- ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக நீலேஷ்வர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இந்த ரயில் நீலேஷ்வர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு நிமிடம் நின்றுச் செல்லும். இந்த கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சேலம், கோவை, கண்ணூர், காசர்கோடு வழியாக இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சேலம் ரயில்வே கோட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.