விளையாட்டு

ஐ.பி.எல். தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு! 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஓய்வுப் பெற்றுள்ளார். இதையடுத்து, நேற்று (மே 22) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு வீரர்களும், ரசிகர்களும் பிரியா விடைக் கொடுத்தனர். 

கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 257 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்களை எடுத்த தினேஷ் கார்த்திக், 22 அரை சதங்களைக் கடந்துள்ளார்.