ட்ரெண்டிங்

மதுபானங்களை விற்பனை செய்யவும், குடிக்கவும் தடை விதித்த ஊராட்சி!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சி ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்கள் புளியங்குறிச்சி பேருந்து நிறுத்தம், நீர்நிலைகள், பள்ளி வளாகங்கள், பொது இடங்களில் அமர்ந்து மதுக்குடித்து வருகின்றனர். மேலும், கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்திக் குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பொதுமக்களின் ஒப்புத்துழைப்புடன் புளியங்குறிச்சி ஊராட்சியில் மதுக்குடிக்கத் தடை விதிக்கவும், கிராமக் கட்டுப்பாடுகளை மீறி மதுக்குடிப்பவர்களையும், மதுபானங்களை விற்பனை செய்பவர்களையும் காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடிவுச் செய்யப்பட்டிருந்தது.

 

இதையடுத்து, புளியங்குறிச்சி கிராம ஊராட்சிக்கு உட்பா நான்கு எல்லைகளிலும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், "புளியங்குறிச்சி ஊராட்சியில் மது விற்பனைக்கு தடைச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பொது இடங்களில் மது அருந்துபவர்கள் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுநலன் கருதி வெளியிடுவோர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஜெயலட்சுமி கணேசன், தலைவர் பெருமாள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.