ட்ரெண்டிங்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் பணத்தைத் திருடிச் சென்ற நபர்களுக்கு காவல

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் பணத்தைத் திருடிச் சென்ற நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு! 

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் உள்ள குப்தா நகரைச் சேர்ந்தவர் சசிதரன் (வயது 37). இவர் தனியார் கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் செந்தில் குமார் ஆகியோர் பக்கத்து பக்கத்துக்கு வீடுகளில் வசித்து வருகின்றனர். சசிதரன் சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். 

இந்நிலையில், ஆகஸ்ட் 06- ஆம் தேதி காலை செந்தில் குமார் வெளியே வர முற்பட்ட போது, வீட்டின் கதவு வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் கூச்சலிட்ட நிலையில், அக்கம், பக்கத்தினர் வந்து கதவைத் திறந்தனர். 

இதையடுத்து வெளியே வந்த செந்தில் குமார், தனது சகோதரரான சசிகுமாரின் வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தனது சகோதரருக்கு செந்தில் குமார் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக விரைந்து வந்து பார்த்த சசிகுமாருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. பீரோவில் இருந்த ரூபாய் 18,000 ரொக்கம் திருடுப் போனது தெரிய வந்தது. 

அதைத் தொடர்ந்து, பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்ற சசிதரன், நடந்தச் சம்பவத்தை விளக்கிக் கூறி, புகார் கொடுத்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு செய்தனர். அத்துடன், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.