ட்ரெண்டிங்

இன்று ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்கள்!

 

சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சேலம் வழியாக செல்லும் பல்வேறு ரயில்கள் இன்றும் (டிச.08) ரத்துச் செய்துள்ளது தெற்கு ரயில்வே. ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 

இன்று (டிச.08) இரவு 09.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம்- சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12672) சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோவை- ஹஸ்ரத் நிஜாமுதீன் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 10- ஆம் தேதி முதல் பிப்ரவரி 04 - ஆம் தேதி வரையும், ஹஸ்ரத் நிஜாமுதீன்- கோவை கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 13- ஆம் முதல் பிப்ரவரி 07- ஆம் வரையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

மேட்டுப்பாளையம்- உதகை ரயிலும் (ரயில் எண் 06136), உதகை- மேட்டுப்பாளையம் ரயிலும் (06137) ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.