ட்ரெண்டிங்

கனமழை: சேலம் வழியாக செல்லும் மேலும் 3 ரயில்கள் ரத்து!

 

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, சேலம் வழியாக செல்லும் மேலும் 3 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்துச் செய்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்று (டிச.04) சென்னை சென்ட்ரல்- மங்களூரு சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22637), சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12695), சென்னை சென்ட்ரல்- மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12685) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில் சேவைகள் முழுவதும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

ரத்துச் செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவுச் செய்துள்ள பயணிகளுக்கு கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.