ட்ரெண்டிங்

கோயில் திருவிழாவில் களைகட்டிய எருதாட்டம்....எருதைப் பிடித்து அசத்திய இளைஞர்கள்!

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி கூடலூரில் உள்ள முத்து முனியப்பன் கோயில் திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, கூடலூர் முத்து முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500- க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

 

முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்தத் திடலில் எருதாட்டம் நடந்தது. இதில், அப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு எருதுகளைப் பிடித்தனர். இதனால் கோயில் திருவிழா களைகட்டியது. 

 

களைகட்டிய இந்த எருதாட்டத்தை தேவராயன்பாளையம், குன்னிப்பாளையம், ஆண்டிபாளையம், மேட்டுவளவு, மகுடஞ்சாவடி உள்பட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

எருதாட்டத்தை தேவராயன்பாளையம், குன்னிப்பாளையம், ஆண்டிபாளையம் மேட்டுவளவு மகுடஞ்சாவடி உள்ளிட்ட உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் நேரில் கண்டுக் களித்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.