ட்ரெண்டிங்

நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்... துரத்திப் பிடித்த அதிகாரிகள்.....700 கிலோ குட்கா பறிமுதல்!

பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்களை சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர், தொப்பூர் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்தனர். 

அதில், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காப் பொருட்களின் மதிப்பு 14 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வாகன ஓட்டுநரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.