விளையாட்டு

AIFF சிறந்த கால்பந்து வீரர் விருது!

2022-23 ஆம் ஆண்டிற்கான அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) சிறந்த கால்பந்து வீரராக மிசோரமைச் சேர்ந்த திறமை மிக்க கால்பந்து வீரரான லாலியன் சுவாலா சாங்டே அறிவிக்கப்பட்டார். AIFF சிறந்தக் கால்பந்து வீராங்கனை விருதினை மனிஷா கல்யாண் பெற்றார். ஆகாஷ் மிஸ்ரா மற்றும் ஷில்ஜி ஷாஜி ஆகியோர் AIFF ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஆண்டின் வளர்ந்து வரும் கால்பந்து வீரர்களாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டனர். இந்த ஆண்டின் சிறந்த ஆடவர் பயிற்சியாளர் விருதானது முன்னாள் இந்திய வீரர் கிளிஃபோர்ட் மிராண்டாவுக்கு வழங்கப்பட்டது. பிரியா பாரதி வளப்பில் ஆண்டின் சிறந்த மகளிர் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.