ட்ரெண்டிங்

கோவை- பெங்களூரு வந்தே பாரத் ரயில்- தொடங்கி வைக்கும் பிரதமர்!

 

டிச.30- ஆம் தேதி கோவை- பெங்களூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். அன்றைய தினம், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லவுள்ள நிலையில், அதற்கான பயண அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக மாலை 06.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும். மதியம் 01.29 மணிக்கு சேலம் ரயில் நிலையத்திற்கு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இரண்டு நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.