ட்ரெண்டிங்

சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வ

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (செப்.03) காலை 10.00 மணிக்கு பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் எம்.பி., "கடந்த ஆட்சிக் காலத்தில் மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு பாசனத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். 

திட்டத்தை மாவட்டத்தின் கடைகோடியான தலைவாசல் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மேட்டூர் உபரி நீரை சரபங்காநதி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளில் இணைக்க வேண்டும். விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 500 கூடுதலாக அரசு வழங்க வேண்டும். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட்டு, ஆலை விரிவாக்கத்திற்காக ஏற்கனவே விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விளை நிலங்களை மீண்டும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.