ட்ரெண்டிங்

அரசு உரையைப் புறக்கணித்த ஆளுநர்....சட்டப்பேரவையில் பரபரப்பு!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

 

கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பை அளித்தார். பின்னர், மேள தாளங்களுடன் ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் வணக்கம் என்று கூறி தமிழில் உரையைத் தொடங்கிய ஆளுநர், வாழ்க தமிழகம், வளர்க பாரதம் என்று கூறி தனது உரையை 2 நிமிடங்களிலேயே நிறைவுச் செய்தார். 

 

அரசு தயாரித்த ஆளுநரின் உரையை ஆளுநர் புறக்கணித்த நிலையில், அதனை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். எனினும், அவையில் அமர்ந்த படி, அவை அலுவல்களை நேரில் பார்த்தார் ஆளுநர். சட்டப்பேரவைத் தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.