ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள களரம்பட்டிக்கு அருகில் உள்ள வடக்குகாடு பகுதியைச் சேர்ந்

கிரேன் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள களரம்பட்டிக்கு அருகில் உள்ள வடக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜா (வயது 40) உள்பட நான்கு தொழிலாளர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது, கிரேன் மூலம் கிணற்றுக்குள் இறங்கிக் கொண்டிருந்த ராஜா, திடீரென கிரேன் கம்பி அறுந்து விழவே, கிணற்றுக்குள் விழுந்தார். அப்போது, பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து, கிணற்றில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டிருந்த தொழிலாளர்கள், படுகாயமடைந்த ராஜாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜா உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜாவின் மனைவி  மல்லியகரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.