ட்ரெண்டிங்

ஆட்சியர் அலுவலக கேண்டீனில் விலை உயர்வு! 


தமிழகத்தில் கடந்த ஜூலை 1- ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆதார் பிழை திருத்தம் மற்றும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு
குறைகளுக்காக வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இந்த உணவகத்தில் உணவு மற்றும்
டீ ,காபி வாங்கி அருந்தி வருகின்றனர் 

இந்த சூழலில், மின் கட்டண உயர்வை மேற்கோள் காட்டி, உணவின் விலையை அதிரடியாக பல மடங்கு உயர்த்தி உள்ளது. குறிப்பாக, 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட வடை தற்பொழுது இரண்டு வடை 15 ரூபாய்க்கும் குழந்தைகளுக்காக வாங்கபடும் பால் விலையும் 20 ரூபாயாகவும், மினி டிபன் 60 ரூபாயாகவும், மீல்ஸ் 80 ரூபாயாகவும், கலவை சாதங்கள் 40 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆட்சியர் அலுவலக கேண்டீனில் உணவு விலை உயர்த்தப்பட்டிருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.