எடப்பாடி நகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன் தலைமையில் எடப்பாடி ஸ்ரீ நடராஜன் மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் இன்று (07.10.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் மட்டும்,கடந்த 4 ஆண்டுகளில்,40 இலட்சம் மக்களில் ரூ.22,117 கோடியில் 121,57,110 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே பயனாளி பல்வேறு திட்டங்கள் மூலம் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர்,உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 290 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மீதமுள்ள 142 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும்,குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறையின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு இப்பகுதியில் 100 சதவீதம் மருத்துவ காப்பீடு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது, எனவும்,கடந்த ஜூன் மாதம்,சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர்,101203 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கியதாக தெரிவித்தார்.
அந்தவகையில் இன்றையதினம் (07.10.2025) எடப்பாடி நகரில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எடப்பாடி ஸ்ரீ நடராஜன் மஹாலில் நடைபெற்றது.மேலும்,உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா. ஆதிதிராவிடர் நத்தம் இணையவழி வீட்டுமனைப்பட்டா, இணையவழி சான்றிதழ்கள், உட்பிரிவு பட்டா மாறுதல், கல்வி, திருமண உதவித்தொகை, உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல், வரிவிதிப்பு, பழசெடி தொகுப்பு, பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு உறுப்பினர் அடையாள அட்டை, நலவாரிய பதிவு அட்டை விலையில்லா மின்னணு குடும்ப அட்டை என பல்வேறு நலத்திட்டங்கள் 467 பயனாளிகளுக்கு ரூ.23.66 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது என,சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்,சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்),எடப்பாடி நகர்மன்ற தலைவர்உள்ளிட்ட ,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


