ட்ரெண்டிங்

வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான்...பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த நாட்டமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் திருக்கைவேலு. இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 02) பாலமலை வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த புள்ளிமான் ஒன்று திருக்கைவேலு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. 

இது குறித்து திருக்கைவேலு உடனடியாக தொலைபேசி மூலம் மேட்டூர் சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து விரைந்து வந்த வனத்துறையினர், வீட்டில் அங்கும் இங்குமாக ஓடிய புள்ளிமானைப் பிடித்தனர். 

அதைத் தொடர்ந்து, காயமைடந்த புள்ளிமானுக்குக்கு அரசு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர், வனத்துறையினர் தங்கள் வாகனத்தில் புள்ளிமானை அழைத்துச் சென்றனர். இதையடுத்து, வனசரகர் சிவக்குமாரிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, புள்ளிமான் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.