ட்ரெண்டிங்

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி! 

மீண்டும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவியேற்றுக் கொண்டார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மார்ச் 22) பிற்பகல் 03.30 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் பொன்முடி. அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், அமைச்சருக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார். 

பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்த நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கோரி முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்த நிலையில், ஆளுநர் மறுத்துவிட்டார். 

இதையடுத்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.