ஆன்மிகம்

செவ்வாய்பேட்டையில் களைக்கட்டிய வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!

செவ்வாய்பேட்டையில் களைக்கட்டிய வண்டி வேடிக்கை நிகழ்ச்சி! 

சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 13) மாலை 05.00 மணி முதல் களைக்கட்டியது. முருகன், விநாயகர், சிவன், குபேரர், லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட கடவுள் வேடமணிந்து, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அலங்கார வண்டியில் உலா வந்தவர்களைப் பார்த்து, பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். 

அப்போது, சாலையில் இருந்த பொதுமக்களுக்கு கடவுள் வேடமணிந்தவர்கள் ஆசி வழங்கினர். அவர்களுடன் பொதுமக்கள் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். சிறந்த அலங்கார வண்டிகளுக்கு பரிசுகளும், சிறப்புத் தொகையும் வழங்கப்பட்டது. குறிப்பாக, குழந்தைகள், சிறுவர்கள் கடவுள் வேடமணிந்து வந்தது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது. சுமார் 10,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வண்டி வேடிக்கை நிகழ்ச்சியால் செவ்வாய்பேட்டை பகுதிக் களைக்கட்டியது. 

சாலையின் இருபுறமும் இருந்த தின்பண்டக் கடைகள் மற்றும் பொம்மைக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. வழக்கத்தை விட வியாபாரம் ஜோராக நடந்ததாகவும், அதிக லாபம் கிடைத்ததாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர். 

வண்டி வேடிக்கை நிகழ்ச்சி காரணமாக, சுமார் 100- க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.