ட்ரெண்டிங்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேலம் உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை அமோகம்!

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

 

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை, உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நேற்று (செப்.18) காலை 06.00 மணியளவில் உழவர் சந்தைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

 

நேற்று (செப்.18) ஒரே நாளில் மட்டும் 197 டன் காய்கறிகளும், 38 டன் பழங்களும் உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்த நிலையில், சுமார் 76.56 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் உழவர் சந்தைகளுக்கு வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை 57,000- ஐ கடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.